அருள்மிகு அருணாசலேசுவரர் திருக்கோயில் - போக்குவரத்து வசதி

இத்திருத்தலம் விழுப்புரம் காட்பாடி ரயில் மார்கத்தில் விழுப்புரத்திலிருந்து 65 கி.மி, தூரத்திலும் காட்பாடியிலிருந்து 90 கி.மி தூரத்திலும் அமைந்துள்ளது.

சென்னையிலிருந்து வந்து செல்வதற்கு நல்ல பேருந்து வசதிகளை இத்திருத்தலம் கொண்டுள்ளது. ஒரு வழித்தடம் செங்கல்பட்டு, மதுராந்தகம், திண்டிவனம், செஞ்சி வழியாகவும் மற்றொறு வழித்தடம் ஸ்ரீபெரும்புதுèர், காஞ்சிபுரம், வேலூர், போலூர் வழியாகவும் செல்லுகிறது.

இத்திருத்தலம் வேலூரிலிருந்து 90 கி.மி. தொலைவிலும், திண்டிவனத்திலிருந்து 60 கி.மி. தொலைவிலும், விழுப்புரத்திலிருந்து 60 கி.மி. தொலைவிலும், கிருஷ்ணகிரியிலிருந்து 100 கி.மி. தொலைவிலும் அமைந்துள்ளது.

இத்திருத்தலத்தில் கிரிவலப்பாதையருகே ஹெலிகாப்டர் இறங்குதளம் ஒன்று உள்ளது. இதன் மூலம் மிக முக்கிய பிரமுகர்கள் சென்னை மற்றும் பிற இடங்களிலிருந்து ஹெலிகாப்டர் மூலம் வந்து செல்ல முடியும்.