அருள்மிகு அருணாசலேசுவரர் திருக்கோயில் - திருப்பணிகள்

இதுவரை நடைபெற்றுள்ள திருப்பணிகள் விவரம்

வ.எண் ஆண்டு (கி.பி.) திருப்பணி விவரம் செய்தவர் விவரம்
1.
-
அண்ணாமலையார் கருவறை
ஆதாரம் ஏதுமில்லை
2.
-
உண்ணாமுலையம்மன் கருவறை
முதலாம் குலோத்துக்கங்கன்
சமீபத்தில் நகராத்தார் மூலம் திருப்பணி செய்யப்பட்டது
3.
870-970
அண்ணாமலையார் கருவறை
ஆதித்திய சோழன்
4.
தல விநாயகர் சன்னதி
செம்பியன் மாதேவி
5.
1230
பிரம்ம தீர்த்தம்
கோப்பெரும் சிங்கம் மகன் வேணுடையான்
6.
சிவகங்கை தீர்த்தம்
கிருஷ்ண தேவராயர்
7.
கிழக்கு நுழைவு வாயில்
கிருஷ்ண தேவராயர், செவ்வப்ப நாயக்கர்
8.
அம்மணி அம்மன் கோபுரம்
அம்மணி அம்மாள்
9.
1328-1331
வள்ளாள கோபுரம்
வள்ளாள மகாராஜா
10.
1053
கிளி கோபுரம்
ராஜேந்திர சோழன்
11.
மூன்றாம் பிரகாரம்
மூன்றாம் குலோத்துங்கன்
12.
1421
கல்யாண சுந்தரேசுவரர் சன்னதி
மூன்றாம் தேவராயர்
13.
1421
கோபுரத்திளையனார் சன்னதி
மூன்றாம் தேவராயர்
14.
பெரிய நன்தி
வள்ளாள மகாராஜா
15.
பீமேசுவர லிங்கம்
கிருஷ்ண தேவராயர்
16.
ஆயிரம் கால் மண்டபம்
கிருஷ்ண தேவராயர்
17.
800
தீப தரிசன மண்டபம் மற்றும் 16 கால் மண்டபம்
மங்கையர்க்கரசி
18.
திருக்கல்யாண மண்டபம்
விஜயநகர மன்னர்கள்
19.
புரவி மண்டபம்
கோப்பெரும் சிங்கம் மகன் வேணு உடையான்
20.
1572
மணி மண்டபம்
தண்டவாவணன்
21.
கொலு மண்டபம்
வேணு உடையான்
22.
மஹாசங்கராந்தி மண்டபம்
கிருஷ்ண தேவராயர்
23.
திருப்பள்ளியறை
இரண்டாம் கோப்பெருஞ்சிங்கம்
24.
அமுத மண்டபம்
இரண்டாம் கோப்பெருஞ்சிங்கம்
25.
அவணி ஆளப்பிறந்தான் மண்டபம்
இரண்டாம் கோப்பெருஞ்சிங்கம்
26.
ஏழாம் திருநாள் மண்டபம்
கிருஷ்ண தேவராயர்
28.
திருமலைதேவி அம்மன் குளம்
கிருஷ்ண தேவராயர்
29.
1240
மலையைச் சுற்றியுள்ள பாதை
ஜடவர்ம விக்கிரம பாண்டியன்
27.
பாதாள லிங்க சன்னதி
J.H. தாராப்பூர்

இத்திருக்கோயிலின் பழுதுபார்ப்பு கணிகளை சுமார் 100 ஆண்டுகளுக்கு முன்நாட்டுக்கோட்டை நகரத்தார்கள் சுமார் 35 லட்ச ரூபாய் செலவு செய்து ஆலயத்தை புதுப்பித்தும், திருவாபரணங்கள், வாகனங்கள் முதலியன செய்து வைத்து 12-6-1903 மகா கும்பாபிஷேகம் செய்துள்ளார்கள்.

மீண்டும் நாட்டுக்கோட்டை நகரத்தார்களின் பேருதவியைக் கொண்டு 4-6-1944ல் அஷ்டபந்தன் மகா கும்பாபிஷேகம் செய்விக்கப்பட்டது.

அம்பிகையின் திருத்தேர் பழுதுபட்டிருந்ததை அப்போதைய அறங்காவலர்களின் முயற்சியினாலும், நாட்டுக்கோட்டை நகரத்தார்களின் முயற்சியினாலும் புதுப்பிக்கப்பட்டு 29-6-1956ல் வெள்ளோட்டம் செய்விக்கப்பட்டது

பின்னர் நாட்டுக்கோட்டை நகரத்தார்களின் பேருதவியினாலும் அரசு மான்யத்தினாலும், இதர திருக்கோயில்களின் உதவியினாலும் இராஜ கோபுரங்கள் விமானங்கள் புதுப்பித்து, சுவாமி, அம்பாள் பரிவார மூர்த்திகளுக்கு சொர்ணபந்தனம், அஷ்டபந்தனம் செய்து கடைசியாக 4-4-1976ல் மகா கும்பாபிஷேகம் செய்விக்கப்பட்டதுவிக்கப்பட்டது.

26 ஆண்டுகளுக்குப் பின்னர் பெரும்பாலும் உபயதாரர்களைக் கொண்டு அஷ்டபந்தன, சொர்ணபந்தன மகா கும்பாபிஷேகம் 27.6.2002ல் சிறப்பாக நடைபெற்றது.