அதிகாரப்பூர்வ வலைத்தளம் அருள்மிகு அருணாசலேசுவரர் திருக்கோயில், திருவண்ணாமலை.
skip to main content
title
திருவண்ணாமலை

அருள்மிகு அருணாசலேசுவரர் திருக்கோயில் - வரலாறு

யானை திறை கொண்ட விநாயகர்

     ஒரு சமயம் ஆந்திர பிரதேசத்தைச் சேர்ந்த அரசர் ஒருவர் போரிட்டு இப்பகுதியைக் கைப்பற்றிய பின் தன் படை வீரர்களுடன் இவ்விடத்தில் தங்கியிருந்தார். அன்று இரவு யானை ஒன்று தன்னையும் தன் படைவீரர்களையும் விரட்டியடிப்பதாகக் கனவு கண்டார். இது குறித்து விசாரித்த போது தான் தவறுதலாக விநாயகப் பெருமானால் பாதுகாக்கப்பட்டு வரும் புனிதத் தலத்தில் தங்கியுள்ளதாக அறிந்தார். தன் தவறை உணர்ந்த அவ்வரசர் விநாயகப் பெருமானிடம் மன்னிப்பு வேண்டியதுடன் தன்னுடைய யானைகளையும் விநாயகப் பெருமானுக்கு காணிக்கையாக அளித்தார்

கிளி கோபுரம்

     ஒரு சமயம் விஜய நகர் மன்னர் பிரபுட தேவராயர் கண் பார்வை இழந்து துன்பமடைந்தார். மன்னரின் நம்பிக்கைக்குகந்த புலவர் சம்பந்தாண்டான் பாரிஜாத மலரைக் கொண்டு சிகிச்சை செய்தால் கண்பார்வை திரும்பக் கிடைக்கும் என்றும் இப்பணியைச் செய்ய வல்லவர் அருணகிரிநாதார் தாம் என்று கூறினார். மன்னரும் இதை ஏற்று அருணகிரிநாதரை பாரிஜாத மலரைக் கொண்டு வரும்படி கேட்டுக் கொண்டார்.

     பாரிஜாத மலர் சொர்க்கத்தில் இருப்பதால் அருணகிரிநாதர் கூடு விட்டு கூடு பாயும் திறமையால் ஒரு இறந்த கிளியின் உடலுக்குள் தன் உயிரைப் புகுத்தினார். உயிரற்ற தன் உடலை ஓரிடத்தில் கிடத்தி விட்டு பாரிஜாத மலரைக் கொண்டு வரச் சென்றார். ஆனால் மலரைக் கொண்டு வருவதற்குள் புலவர் சம்மந்தாண்டனது சூழ்ச்சியினால் அருணகிரிநாதரின் அவர் உடல் தகனம் செய்யப்பட்டு விட்டது. தன் பூத உடல் மீண்டும் திரும்பப் பெற முடியாதோல் அருணகிரிநாதர் கிளி வடிவில் வாழ்ந்து கந்தரனுபூதி முதலான பாடல்கனை இயற்றினார். இக்கோபுரத்தின் கலசத்தில் அருணகிரிநாதர் கிளி உருவாக அமர்ந்து சென்றதால் இதற்கு கிளி கோபுரம் என்ற பெயர் வழங்கலாயிற்று.