அருள்மிகு அருணாசலேசுவரர் திருக்கோயில் - வரலாறு

முருகப்பெருமானால் அருணகிரிநாதர் காப்பாற்றப்பட்ட சம்பவம்

தனது இளமைக் காலத்தில் விரக்தியுற்ற அருணகிரிநாதர் வள்ளாள மகாராஜா கோபுரத்தின் உச்சியிலிருந்து குதிப்பதற்கு முயற்சியுற்றார். முருகப் பெருமான் அருணகிரிநாதருக்கு காட்சியளித்து அவரது உயிரைக் காப்பாற்றினார். இச்சம்பவத்திற்குப் பின் அருணகிரிநாதர் திருப்புகழ் பாடியருளினார்.

வள்ளாள மகாராஜாவின் ஈமக்கிரியைகளை அருணாசலேசுவரரே செய்து வருதல்

எல்லா நற்குணங்களும் நிரம்பியவர் வள்ளாள மகாராஜா என்று அருணாசல புராணம் கூறுகிறது. நேர்மை, கொடைத்தன்மை மற்றும் அருணாசலேசுவரர் மீது அளவிலா பற்று கொண்டவர் இவர். இம்மன்னருக்கு குழந்தை பாக்கியம் கிட்டவில்லை இவருடைய பக்தியை சோதிக்க எண்ணிய சிவபெருமான் இவருக்கும் இவர் மனைவிக்கும் குழந்தையாக îதான்றினார். இறைவனின் அருளை வியந்து இத்தம்பதியினர் அக்குழந்தையைத் தழுவும் போது இறைவன் மறைந்து விட்டார். பின்னர் இறைவனிடம் தன் மனக்குறையை வெளிப்படுத்திய போது, இறைவன் அவருக்கு காட்சியளித்து மன்னர் தன் கடமைகளை சரிவர செய்து வர வேண்டுமென்றும் அவருடைய ஈமக்கிரியைகளை தானே செய்வதாகவும் வாக்களித்தார். இப்போது கூட ஒவ்வொரு ஆண்டும் மாசிமாதத்தில் வள்ளாள மகாராஜாவின் திதி நாளன்று அருணாசலேசுவரர் பள்ளிகொண்டாபட்டு என்ற கிராமத்தில் எழுந்தருளி மிகுந்த சம்பிரதாயங்களுடன் ஈமக்கிரியைகள் செய்வது வழக்கம். இவ்விழாவிற்கு மாசிமகம் தீர்த்தவாரி என்று பெயர்.