அருள்மிகு அருணாசலேசுவரர் திருக்கோயில் - வரலாறு

முருகப்பெருமான் நேரில் தோன்றுதல்

அருணகிரிநாதர் முருகப்பெருமானின் தீவிர பக்தர். அரசவைப்புலவராக இருந்த சம்பந்தன் காளி தேவியிடம் வரங்கள் பல பெற்றவர். அருணகிரிநாதரின் புகழில் பொறாமையுற்ற சம்பந்தன் தனக்கும் அருணகிரிநாதருக்குமிடைய ஒரு போட்டியை ஏற்பாடு செய்யுமாறு மன்னரைக் கேட்டுக்கொண்டார். அதாவது இருவரில் யார் தங்களுடைய கடவுளை நேரில் தோன்றச் செய்விப்பது என்பது தான் போட்டி.

இப்போட்டியில் சம்பந்தனால் தனது தெய்வமான காளியைத் தோன்றச் செய்ய இயலவில்லை. ஆனால் அருணகிரிநாதர் வேண்டுதலின் பேரில் முருகப்பெருமான் நேரில் காட்சியளித்தார். இந்நிகழ்ச்சிக்குப்பின் இத்தலம் முருகபக்தர்கள் யாத்திரை செல்லும் புகழ் மிக்க தலங்களில் ஒன்றாக விளங்குகிறது..

சிவபெருமானால் வள்ளாள மகாராஜாவின் அகந்தை அகற்றப்பட்ட சம்பவம்

வள்ளாள மகாராஜா இக்கோபுரத்தைக் கட்டி முடித்தவுடன் தன் சாதனையை எண்ணி கர்வமுற்றார். அவருக்கு பாடம் புகட்ட எண்ணிய சிவபெருமான் பத்து நாட்கள் நடைபெறும் திருவிழாவில் முதல் ஒன்பது நாட்களும் வள்ளாள மகாராஜா கோபுரத்தின் வழியாக செல்ல மறுத்து விட்டார். தன் தவறை உணர்ந்த மன்னர் இறைவனிடம் தன்னை மன்னிக்கும்படி வேண்டினார். அதன் பின் பத்தாவது நாளில் இக்கோபுரத்தின் வழியாக செல்ல இறைவன் ஒப்புக்கொண்டார். சிவபெருமானின் இச்செயல் வள்ளாள மகாராஜாவிற்கு மட்டுமின்றி அகந்தையுற்ற ஒவ்வொருவருக்கும் பாடமாக அமைந்துள்ளது.