அருள்மிகு அருணாசலேசுவரர் திருக்கோயில் - வரலாறு

அர்த்தநாரீஸ்வரர்

உமாதேவியார் விளையாட்டாக சிவபெருமானின் கண்களை தன் கையால் மூட உலகம் எங்கும் இருளாயிற்று. ஜீவராசிகள் இருளில் இன்னல்கள் அடைந்தன. இந்த பாவம் தீர்க்க வேண்டி உமாதேவியார் காஞ்சி மாநகரத்தில் மணலை லிங்கமாக அமைத்து பூஜை செய்துவரும் நாளில் சிவபெருமான் தோன்றி திருவண்ணாமலை சென்று தவமியற்றி தமது இடப்பாகம் பெறுமாறு அருளிச் செய்தார். சிவபெருமான் கட்டளைப்படி பார்வதி தேவியார் திருவண்ணாமலைக்கு வந்து பவழக்குன்று மலையில் பர்ணசாலை அமைத்து கௌதம முனிவரின் உதவியால் தவம் செய்தார். தவத்தை மகிடாசூரன் என்பவன் கெடுத்து வந்தான். உமாதேவியார் துர்க்éயாக உருவெடுத்து மகிடாசூரனை வதம் செய்து, கார்த்திகை மாதம் பௌர்ணமி கூடிய கிருத்திகை பிரîதாஷ கால்த்தில் மலை மேல் ஜோதி ஸ்வரூப தரிசனம் கண்டு சிவபெருமான் இடப்பாகம் பெற்று உமாதேவியார் அமர்ந்தார்.

அதனைக் குறிக்கும் வகையில் கார்த்திகை தீபத்தன்று மாலை சரியாக 6.00 மணிக்கு அர்த்தநாரீஸ்வர மூர்த்தி எழுந்தருளி காட்சி கொடுப்பது குறிப்பிடத்தக்கது.