அருள்மிகு அருணாசலேசுவரர் திருக்கோயில் - வசதிகள்

மலை வலம்

மலை வலம் வரும் பக்தர்களின் வசதிக்காக மலைசுற்றி வரும் 14 கிலோமீட்டர் பாதை முழுவதற்கும் சோடியம் ஆவி விளக்குகள் புதிதாக பொருத்திதரப்பட்டுள்ளது. இது இரவில் மலைவலம் வரும் பத்தர்களுக்கு மிகவும் பயனுள்ளதாக அமைந்துள்ளது. மலை வலம் வரும் வழியில் ஆங்காங்கே நகர நிர்வாகத்தின் சார்பில் ஆழ்துளை கிணறு மூலம் குழாய் பம்ப் போடப்பட்டு குடிநீர் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. மேலும் பக்தர்களின் நலனுக்காக குறிப்பிட்ட காலத்தில் ஸ்ரீ அகஸ்தியர் ஆஸ்ரமம் சார்பிலும் பல மெய்யன்பர்களாலும் ஆங்காங்கே அன்னதானமும் மற்றும் பால் விநியோகமும் செய்யப்பட்டு வருகிறது

அருணாச்சலேசுவரர் திருக்கோயில்

திருக்கோயிலுக்கு வரும் சேவார்த்திகளுக்காக, விரைவாகவும் முறையாகவும் சென்று தரிசனம் செய்வதற்காக திருக்கோயில் செலவில் சுவாமி-அம்மன் சந்நதிகளில் ஜி.ஐ. பைப் லைன் மூலம் 'க்யூ' லைன் போடப்பட்டு சுற்றிலும் மின் விசிறிகள் அமைக்கப்பட்டுள்ளது.

மற்றும் எக்ஸாஸ்ட் பேன் மூலம் உஷ்ண காற்று வெளியே செல்வதற்கும் வழி வகை செய்யப்பட்டுள்ளது. இதேபோன்று சுவாமி சன்னதி வெளிப்பிரகாரத்தில் நன்கொடை செலவில் பக்தர்கள் வசதிக்காக மேற்கூரை தகடு பொருத்திய நிழல் தரும் க்யூ லைன் வசதியும் செய்து தரப்பட்டுள்ளது. மேலும் உள் பிரகாரங்களில் ஆங்காங்கே தண்ணீர் தொட்டிகள் நிறுவப்பட்டு தடையின்றி குடிநீர் சப்ளை செய்யப்பட்டு வருகிறது.

* பக்தர்களின் வசதிக்காக குறைந்த கட்டணத்தில் தங்கும் விடுதிகள் திருக்கோயில் நிர்வாகத்தினரால் செய்யப்பட்டுள்ளது..
* ஓய்வு இல்லங்களுக்கு நாள் வாடகை ரூ.200 மற்றும் ரூ.150 ஆகும்.
* அப்பர் இல்லத்தில் அறை வாடகை நாளொன்றுக்கு ரூ. 100 ஆகும்.
* உண்ணாமுலையம்மன் ஓய்வு விடுதியில் இரட்டை அறைகளுக்கு நாள் வாடகை ரூ.100 மற்றும் ஒற்றை அறைகளுக்கு நாள் வாடகை ரூ. 50 ஆகும்.
* இது தவிர தனியார் தங்கும் இடங்கள் கோயிலைச் சுற்றிலும் அமைந்துள்ளது.

சக்திவிலாச சபா மண்டபம்

திருக்கோயிலில் பிரம்ம தீர்த்தக் குளத்திற்கு எதிரில் தவத்திரு ஞானியர் சுவாமிகள் நிறுவிய சக்திவிலாச சபா மண்டபம் உள்ளது. இங்கு சமய சம்மந்தமான நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டு வருகிறது

சத்திரம், வேதபாடசாலை முதலியன.

நாட்டுக்கோட்டை நகரத்தார்கள் தங்களது சொந்தப் பொறுப்பில் சாதுக்கள் சத்திரம், அன்னசத்திரம், வேதபாடசாலை, ஓயா மடம் ஆகிய சத்திரங்களை திருவண்ணாமலையில் நிறுவி உள்ளார்கள். தவிர இந்து சமூகத்தின் பல பிரிவினர் திருக்கோயிலுக்கு சாதாரண மற்றும் விசேஷ காலங்களில் வந்து தரிசித்து செல்லும் வகையில் அந்தந்த சமூகத்தினரால் கட்டி வைக்கப்பட்டுள்ள சத்திரங்கள் மடங்கள் பல இவ்வூரில் உள்ளன.